Welcome to our website


சுயவிபரம் - அகணி சுரேஸ், கனடா எழுத்தாளர்,கவிஞர், பாடலாசிரியர் கல்வித்தகைமை : பொறியியல் பட்டதாரி, கணினித் துறையில் முதுமாணிப் பட்டம் . B.Sc.Eng (University of Peradeniya, SriLanka) M.Sc in Computing (University of Central England, Birmingham. UK ) Civil Engineer and Computer Professional/
Writer, Poet, Lyricist எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர், பட்டிமன்றத் தலைவர், கவியரங்கத் தலைவர், நூலாசிரியர் எனப் பல்வேறு ஈடுபாடுகளுடன் படைப்பாளியாக விளங்குகின்றமை. அறிவியல் கட்டுரைகள். விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றமை. எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் :
1. கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி)
2. சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி)பொதிகைப் புதுமலர்கள் (மரபுக்கவிதைத் தொகுதி) (கனடா வாழ் கவிஞர் எண்மருடன் இணைந்து எழுதியது)
3. நினைவாற்றல்(அறிவியல் நூல்)
4. வெகுளாமை (அறிவியல் நூல்)
5. காலத்தோடு வளரும் கணினிகள் (அறிவியல் நூல்)
6. அன்புடைமை (அறிவியல் நூல்)
7. இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்
8. இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு (நாவல்)
9. கதைச்சாரல்(சிறுகதைத்தொகுதி)
10. Non-Profit Know-How
11. கட்டுரைச் சாரல் (பல்சுவைக் கட்டுரைத் தொகுதி)
12. குவலயம் ஆளும் குடிசார் பொறியியல் (அறிவியல் நூல்) 13. ஒளவையார் அமுதம் தொகுப்பு நூல் (Bi-lingual)
பாடல் வரிகள் எழுதி இசை வடிவம் பெற்ற பாடல்கள் - 48 விருதுகள் – Awards
1. Advance Communicator Gold (ACG) Award from Toastmaster International
2. Advanced Leadership Bronze (ALB) Award from Toastmaster International
3. திருவள்ளுவரின் வாய்மையியல் நெறியறி செம்மல் விருது – உலகத் திருக்குறள் மையம்
4. திருக்குறள் நூலறி செல்வர் விருது –உலகத் திருக்குறள் மையம்
5. திருக்குறள் நூலறி செம்மல் விருது –உலகத் திருக்குறள் மையம்
6. குறட்பாட்ச் செல்வர் விருது –உலகத் திருக்குறள் மையம்
7. திருவள்ளுவரின் ஊழியல் நெறியறி செம்மல் விருது – உலகத் திருக்குறள் மையம்
8. மணிமேகலை பிரசுரத்தின் 2018 சிறந்த நாவலுக்கான விருது
9. சாதனைத்தமிழன் விருது( டில்லி இலக்கியப் பேரவை)
10. திருக்குறள் செம்மல் விருது
11. திருவள்ளுவர் விருது -2022.
12. தென்மறத் தமிழ்த் தென்றல் விருது ( இங்கிலாந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்)
13. நிறைதமிழ் விருது ( சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம்)
14. திருக்குறள் ஆய்வுச் செம்மல் விருது 2023 - திருவள்ளுவர் தின விழா , செ வெ ரெக்கார்டு ஹோல்டர் போரம்
15. பாவலர் விருது - கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம்
16. மரபுமாமணி விருது - முனைவர் அசோகன், தமிழ்நாடு அவர்களால் வழங்கப்பட்டது
17. மதிப்புறு முனைவர்
18. வட அமெரிக்கத் தமிழ் மேன்மையாளர் விருது - கனடாத் தமிழ் சங்கம்
19. பன்முக வித்தக ஞாயிறு - சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் , நியூ சவுத் வேல்ஸ், அவுஸ்திரேலியா
20. SEVE LEGEND AWARD – 2024 – ALL INDIA BOOK OF RECORDS 21. செந்தமிழர் விருது - தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை, சொ .முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை - 2024
22. காவிய நாயகன் விருது - செ .வெ .ரெகார்டு ஹோல்டர் போரம்-2024

பிற தமிழ் மொழி சார்ந்த செயற்பாடுகள் · பல்வேறு இளையோருக்கான தமிழ் மொழி பேச்சுப் போட்டிகளில் நடுவராகப் பணி புரிந்தமை ·
பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் பாடல் போட்டிகளில் -தமிழ் மொழி ஆளுகை நடுவராக பங்காற்றி வருகின்றமை ·
தமிழ் மொழி மூலமும், ஆங்கில மொழி மூலமும் நினைவாற்றல் பட்டறைகளை நடத்தியமை. ·
தமிழ் தொழில் நுட்பக்கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களுக்கான கணினிப் பட்டறைகளை நடத்தியமை. · இந்தியாவில் இருந்து வெளிவரும் புதிய நந்தவனம், கவிதை உறவு ஆகிய சஞ்சிகைகள், கனடாவில் இருந்து வெளிவரும் விளம்பரம், தாய்வீடு, உதயன், செந்தாமரை, தமிழ் மிரர், உலகத்தமிழர், ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும், தளிர், தூறல், பார்வைகள் சஞ்சிகைகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகின்றமை. · பதிவுகள்.கொம், சாமந்தி.கொம், சிறுகதைகள்.கொம் ஆகிய இணைய தள சஞ்சிகைகளில் எழுதிவருகின்றமை ·
“தமிழ் அழகே ” என்ற பாடல் உட்பட பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதித் தயாரித்து இளையோருக்கு அதில் பங்கேற்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றமை.
 உலகத் திருக்குறள் மையத்தின் பயிலரங்குகளில் பங்குபற்றி வந்தமை. நூல் திறனாய்வுகள் செய்து வருகின்றமை. ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றமை. - முன்னாள் தலைவர், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் - தலைவர் , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்

15 உலக சாதனைகள் ·
“133 திருக்குறள் அதிகாரங்கள் , 133 மரபுக் கவிதைகள் 133 மரபுக்கவிஞர்கள் ” உலக சாதனை நிகழ்வு நடத்தியமை ·
28 மணி நேர தொடர் சொற்பொழிவுச் சாதனை. · பொன்னிறத் தகட்டில் வெப்ப எழுத்தி மூலம் 1330 குறள் பதிவுச்சாதனை ·
செப்புத்தகடுகளில் 1330 குறள் எழுதிச் சாதனை ·
16 மணி நேர நெறியாள்கை – பாடல் வெளியீட்டு நிகழ்வு · பாடல் தயாரித்து 16 மணி நேர வெளியீட்டு நிகழ்வு நடத்தியமை -
ஒரு வாரத்தில் 3 நாடுகளில் நூல் வெளியீடு நிகழ்த்தியமை -133 மரபுக்கவிதைகள் 133 புதுக்கவிதைகள் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தியமை -
புதிய குறிப்பெடுத்தல் வழிமுறையை அறிமுகப்படுத்தியமை
35மணி நேர தொடர் சொற்பொழிவாக 210 நூல்களுக்கான அறிமுக உரையை வழங்கியமை -
அன்னையருக்கு ஒரு பாடல், தந்தையருக்கு ஒரு பாடல் உட்பட நான்கு பாடலுக்கு பாடல் வரி எழுதி இசையமைப்பித்து 12மணி நேர வெளியீட்டு விழா நடத்தியமை
20.15 மணி நேர நூல், பாடல் வெளியீட்டு நிகழ்வுச் சாதனை (5 மணி நேர நேரடி நிகழ்வு, 15 மணி நேர 15 நிமிடம் மெய்நிகர் நிகழ்வு )
41 மணி நேரம் தொடர்ச்சியாக 133 படைப்பாளிகளின் 133 சிறுகதைகளை விளக்கத்துடன் படித்து உலக சாதனை செய்தமை கனடாவில் இருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள குறிப்பு 30 மணி 40 நிமிடம் விமானப் பயணத்தில் சுயசரிதைக்கான குறிப்பு எழுதும் சாதனை (24மணி) நேர விமானப்பயணம் , 6 மணி 40 நிமிடம் விமான நிலையக் காத்திருப்பு
ஆஸ்திரேலியாவில் ஆறு நூல்களையும் , ஏழு பாடல்களையும் அறிமுக நிகழ்வுச் சாதனை நிகழ்வு
48 மணி நேரம் தொடர்ச்சியாக கம்பராமாயணம் மூலமும் உரையும் தலைப்பில் சொற்பொழிவுச் சாதனை செய்தமை